ரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ஆராய்ச்சி தீவிரம்!

தினமலர்  தினமலர்
ரெம்டெசிவிர் மருந்தை நெபுலைசர் மூலம் தரும் ஆராய்ச்சி தீவிரம்!

கலிபோர்னியா: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது நரம்பு ஊசி மூலம் கொடுக்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்தை, நெபுலைசர் மூலம் வீட்டிலுள்ளவர்களும் சுவாசித்து குணமடையக் கூடிய வகையில் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட ஒரே மருந்தாக ரெம்டெசிவிர் மட்டுமே உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிலியட் நிறுவனம் இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்தை எபோலாவுக்கு எதிராக உருவாக்கியது. சில மாற்றங்களுடன் இவை தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. டமிப்ளூ போன்ற பிற வைரஸ் தடுப்பு மாத்திரைகளை ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலேயே கொடுக்கும் போது சிறப்பாக செயல்படுவதாக கண்டறிந்துள்ளனர். எனவே கொரோனா வைரசுக்கு அவ்வாறு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ரெம்டெசிவிரை மாத்திரையாக எடுத்தால் கல்லீரல் சிதைவடைந்து மேலும் ஆபத்திற்கு இட்டுச்செல்லும். தற்போது மருத்துவமனையில் மட்டும் நரம்பின் வழியாக இம்மருந்து செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் ரெமெடிசிவரின் ஊசி தயாரிப்பு மற்றும் உள்ளிழுக்கும் வகையில் உலர் பவுடராக்கும் வடிவத்தை முயன்று பார்க்கின்றனர். மேலும் தற்போதைய ரெமெடிசிவரை எவ்வாறு நீர்த்துப்போகச் செய்து ஒரு நெபுலைசருடன் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றனர்.

கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கும் என அறியப்படுவதால், ஒரு நெபுலைசர் மூலம் மருந்தை புகை வடிவத்தில் சுவாசிப்பதால் அவை நுரையீரல் திசுக்களை நேரடியாக அடையும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு முன்கூட்டியே சிகிச்சையளிக்க இது அனுமதிக்கும். ஆனால் இவை அனைத்தும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன என்று கிலியட் ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.


"மக்கள் சரியான நேரத்தில் உள்ளிழுக்கும் சூத்திரத்தை எதிர்நோக்குகிறார்கள்," ஆனால் வளர்ச்சி மிக ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர் மைக்கேல் யீ கூறினார், வைரஸால் பாதிக்கப்பட்ட பலருக்கு குறைந்தபட்ச சிகிச்சை தேவைப்படுவதால் தேவை குறைவாக இருக்கலாம். கிலியட் ரெமெடிவிர் வழங்குவதற்கான அதன் திறனை வளர்த்து வருவதாகவும், வணிக விலை நிர்ணயம் குறித்து உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பேசத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூலக்கதை