பாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா

தினமலர்  தினமலர்
பாக்.,கில் 76 ஆயிரத்தை கடந்தது கொரோனா

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 3,938 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாட்டில் மொத்த பாதிப்பு 76,398 ஆக அதிகரித்ததாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான் கான் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பாக்.,கில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) 3,938 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,398 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்புகளில் சிக்கி 78 பேர் பலியாகினர். பாக்.,கில் பலியானவர் களின் மொத்த எண்ணிக்கை 1,631 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,110 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.


பாக்.,கில் ஒரே நாளில் 16,548 பேர் பரிசோதிக்கப்பட்டனர். பாக்,,கில் இதுவரை 5,77,974 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில், பஞ்சாப்பில் 27,850 பேர், சிந்துவில் 29,647 பேர், கைபர்-பக்துன்க்வாவில் 10,485 பேர், பலுசிஸ்தானில் 4,515 பேர், இஸ்லாமாபாத்தில் 2,893 பேர், கில்கித்-பஸ்திஸ்தானில் 738 பேர்மற்றும் பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 271 பேர் என பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை