இந்திய வம்சாவளி ஓட்டுனருக்கு 22 ஆண்டு சிறை

தினமலர்  தினமலர்

மெல்பர்ன்:இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி ஓட்டுனர் மெஹிந்தர் சிங், 48. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானார்.

கடந்த ஆண்டு ஏப்ரல், 22ம் தேதியன்று, விக்டோரியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில், லாரி ஓட்டி சென்றார்.அப்போது தீவிரமான போதை மருந்து மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.மேலும், சரியான துாக்கமின்றி போதையில் லாரி ஓட்டி சென்ற மொஹிந்தர் சிங், நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது லாரியை மோதினார்.இந்த விபத்தில், நான்கு போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விக்டோரியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப் பட்டது.ஓட்டுனர் மொஹிந்தர் சிங்குக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார். இதில், 18 ஆண்டுகள் அவர் 'பரோலில்' வெளியே வர முடியாதபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை