அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட டிவிட்டர் நிறுவனரின் முதல் டுவீட்..!

தினமலர்  தினமலர்
அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட டிவிட்டர் நிறுவனரின் முதல் டுவீட்..!

டுவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்ஸே கடந்த 2006-ஆம் ஆண்டு டிவிட்டர் சமூக வலை தளத்தை உருவாக்கினார். இதனை அடுத்து இவர் இட்ட முதல் டுவீட் தற்போது ஏலம் விடப்பட்டது. இது சில நிமிடங்களில் 88,888 அமெரிக்க டாலர் விலைக்கு ஏலம் விடப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
ஜாக், 'ஜஸ்ட் செட்டிங் ஆப் மை டிவிட்டர்' (just setting up my Twitter) என்ற முதல் டுவீட்டை தனது டிவிட்டர் கணக்கிலிருந்து பதிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக டிவிட்டர் நிறுவனம் தனது குறுஞ்செய்திகள், விளம்பரங்கள், சிறிய வீடியோக்கள், புகைப்படங்கள் மூலமாக அதீத வளர்ச்சி கண்டுள்ளது.

மூலக்கதை