வங்கதேச அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

தினமலர்  தினமலர்
வங்கதேச அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

தாகா:அண்டை நாடான, வங்க தேசம் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ஏ.கே.அப்துல் மேமனை, சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, 26 மற்றும் 27ம் தேதிகளில், இரண்டு நாள் பயணமாக, வங்கதேசம் செல்கிறார். அந்நாட்டு பிரதமர், ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று, வங்கதேசத்தின், 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார். அப்போது, வங்கதேசத்தின் தாகாவில் இருந்து, மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பாய்குரி வரையிலான, பயணியர் ரயில் சேவையை, இரு நாட்டு பிரதமர்களும், கொடியசைத்து துவக்கி வைக்கின்றனர்.

இந்நிலையில், வெளிஉறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசம் சென்றார். அவரை, அந் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மேமன், விமான நிலையத்தில் வரவேற்றார். இரு நாட்டு அமைச்சர்களும், பல்வேறு விவகாரங்கள் குறித்து, விரிவாக விவாதித்தனர். பிரதமர் மோடியின் வருகையின் போது, கையெழுத்தாக உள்ள ஒப்பந்தங்கள் குறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.மோடியின் வருகை தொடர்பான ஏற்பாடுகளையும், அவர் முழுமையாக ஆய்வு செய்தார்.

மூலக்கதை