உலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு

தினமலர்  தினமலர்
உலக சுகாதார அமைப்பை குற்றஞ்சாட்டும் கொரோனா தடுப்பு அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் குழு தற்போது சீனாவின் வூஹான் நகரில் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஊஹான் நகரில் இருந்து எவ்வாறு உலகுக்குப் பரவியது என்று விசாரணை செய்ய 14 பேர் கொண்ட மருத்துவ விஞ்ஞானிகள் குழு அங்கு சென்று உள்ளது.



தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து இந்த மருத்துவர்கள் சீனாவுக்கு வருகை தந்ததால் 14 நாட்கள் தனிமையில் உள்ளனர். இது முடிந்ததும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்று உறுதிப்படுத்தப்படும். இதனை அடுத்து இவர்கள் வூஹானில் உள்ள கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் பரிசோதனை கூடத்தை ஆய்வு செய்வார்.

இந்த விசாரணை முடிவுகளுக்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆவலாகக் காத்திருக்கின்றன. தற்போது சீனா உள்ளூர பீதி அடைந்து உள்ளது. இந்த விஞ்ஞானிகள் குழுவை திசைதிருப்ப சீன கம்யூனிச அரசு மற்றும் சீன விஞ்ஞானிகள் பலவித கருத்துக்களை கூறி வருகின்றன.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் விசாரணை அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா ஆகிய இரண்டுமே தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்கலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.



இந்த அமைப்பு ஐநா சுகாதாரத் துறையும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத் துவக்கத்தில் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. ஆனால் இதுதொடர்பாக ஐநா சுகாதாரத்துறை அவசர கூட்டம் ஜனவரி 22, 2020 அன்று நடைபெற்றது.

இதற்கு முன்னரே இந்த கூட்டம் நடைபெற்று இருந்தால் வைரஸ் தாக்கத்தை கணிசமாக குறைத்து இருக்கலாம் என்று கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடியிருந்தார். சீனாவின் கையாளாக இந்த அமைப்பு செயல்படுகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை