ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்

 

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார் 1941ல் பிறந்த அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி அவர்கள் ரஷ்யாவின் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழை நாட்டு மொழிகளுக்கான பட்டம் பெற்றார். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ் கற்பித்து வந்தார். 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு துப்யான்ஸ்கி அவர்கள் தமிழ் கற்பித்தார். பல துறைகளைச் சார்ந்தவர்களும் கூட அவரிடம் ஆர்வத்துடன் தமிழ் கற்றனர். 2000-ல் துப்யான்ஸ்கி அவர்கள் வெளியிட்ட ‘ரிச்சுவல் ஆஃப் தி ஏர்லி தமிழ் பொயட்ரி’ என்ற புத்தகம் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பு ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை துப்யான்ஸ்கி அவர்கள் நடத்தி வந்திருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர். தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவராகத் திகழ்ந்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞரான துப்யான்ஸ்கி அவர்கள் நேற்று தன்னுடைய 79வது வயதில் மாஸ்கோவில் காலமானார்.

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்

1941ல் பிறந்த அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி அவர்கள் ரஷ்யாவின் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழை நாட்டு மொழிகளுக்கான பட்டம் பெற்றார். ஏறத்தாழ 50 ஆண்டுகளாக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ் கற்பித்து வந்தார். 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு துப்யான்ஸ்கி அவர்கள் தமிழ் கற்பித்தார். பல துறைகளைச் சார்ந்தவர்களும் கூட அவரிடம் ஆர்வத்துடன் தமிழ் கற்றனர். 2000-ல் துப்யான்ஸ்கி அவர்கள் வெளியிட்ட ‘ரிச்சுவல் ஆஃப் தி ஏர்லி தமிழ் பொயட்ரி’ என்ற புத்தகம் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பு ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை துப்யான்ஸ்கி அவர்கள் நடத்தி வந்திருக்கிறார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர். தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவராகத் திகழ்ந்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞரான துப்யான்ஸ்கி அவர்கள் நேற்று தன்னுடைய 79வது வயதில் மாஸ்கோவில் காலமானார்.

 

மூலக்கதை