மலேசியாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: ஆட்சியை தக்கவைப்பாரா பிரதமர் முகைதின் யாசின்?

தினமலர்  தினமலர்
மலேசியாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: ஆட்சியை தக்கவைப்பாரா பிரதமர் முகைதின் யாசின்?

கோலாலம்பூர் : மலேசியாவில் தற்போது அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. அங்கு, பிரதமர் முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க, முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு, மகாதீர் முகமது, அன்வர் இப்ராகிமின் உதவியோடு, 60 ஆண்டுகளாக மலேசியாவில் நீடித்து வந்த ஒருங்கிணைந்த மலாய் தேசிய அமைப்பு ஆட்சியை கவிழ்த்து வெற்றிகண்டார். இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், முகைதின் யாசின், மகாதீர் முகமது ஆகியவர்கள் ஆவர். இவர்கள் மூவருக்குள்ளும் தற்போது பிரிவினை ஏற்பட்டுள்ளது.கடந்த செவ்வாயன்று அன்வர் இப்ராகிம், மலேசிய அரசரை சந்தித்து இதுகுறித்து பேசினார். கூட்டணியின் உதவியோடு முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க, மகாதீர் முகமது முயன்று வருகிறார்.

மலேசியாவில் நிலையான ஆட்சி அமையாததால், எப்போது வேண்டுமானாலும் தற்போது உள்ள ஆட்சி கலைக்கப்படலாம் என, மகாதீர் முகமது கோலாலம்பூரை சேர்ந்த ராய்ட்டர்ஸ் கிளைக்குப் பேட்டி அளித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு மகாதீர் முகமது, அன்வர் இப்ராகிமின் உதவியோடு 60 ஆண்டுகளாக மலேசியாவில் நீடித்து வந்த ஒருங்கிணைந்த மலாய் தேசிய அமைப்பு ஆட்சியை கவிழ்த்து வெற்றி கண்டார். ஆனால், தொடர்ந்து அவர்மீது எழுந்த குற்றச்சாட்டு காரணமாக பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனை அடுத்து, முஹைதீன் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.மலேசிய பாராளுமன்றத்தில், 222 எம்.பி., தொகுதிகள் உள்ளன. தங்களது கட்சியின் எம்.பி.,க்கள் பலத்தை வைத்து, முகைதீன் ஏழு மாதங்கள் வரை ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

தற்போது மகாதீர் முகமது, அன்வர் இப்ராகிம் மற்றும் முகைதீன் ஆகிய இருவருக்கும், தான் ஆதரவு அளிக்கப் போவதில்லை என, வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். 94 வயதான மகாதீர் முகமது, மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ஆவார். தனது பேஜூவாங் கட்சியை, பல ஆண்டு காலமாக பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவர் இவர். முகைதீனின் ஆட்சியை கலைக்க, தற்போது மகாதீர் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். முகைதீன் ஆட்சிக்கு எதிராக, மலேசிய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர, மகாதீர் முகமது கட்சியின் எம்.பி.,க்கள் முயன்று வருகின்றனர்.

மூலக்கதை