கண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது

தினமலர்  தினமலர்
கண்டன தீர்மானம்: டிரம்ப் மீதான விசாரணை துவங்கியது

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், 2020 -ம் ஆண்டு நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டொனால்டு டிரம்ப் போட்டியிட முயற்சித்து வருகிறார்.


எதிர்க்கட்சியான, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, முன்னாள் துணை அதிபர், ஜோ பிடனும் முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜோ பிடனை வீழ்த்த திட்டமிட்ட, டிரம்ப், ஜோ பிடன், இவரது மகன் ஹன்ட்டர்ஸ் குறித்து அவதூறு பரப்ப உதவும்படி, ஐரோப்பிய நாடான, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. உக்ரைன் அதிபருடன், டிரம்ப் தொலைபேசியில் பேசிய விபரத்தை, அதிபர் மாளிகையைச் சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக அம்பலப்படுத்தினார்.

இதையடுத்து டிரம்புக்கு எதிராக, ஜனநாயகக் கட்சி, கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது. பார்லி.உளவு கமிட்டி இதன் மீதான தனது விசாரணையை துவக்கியது. முதல் முறையாக, இந்த விசாரணை, 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மூலக்கதை