கடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் தாக்கு

தினமலர்  தினமலர்
கடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் தாக்கு

நியூயார்க் : சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் குப்பைகளை சுத்தம் செய்யாமல், கடலில் கொட்டுகின்றன. இந்த குப்பைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

நியூயார்க்கில் பொருளாதாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப், தட்பவெப்ப நிலை மாற்றம் பெரிய சிக்கலான விஷயம். சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் இதை சரி செய்வதற்கான பல வழிகள் குறித்து ஆலோசித்து வருகிறேன். பூமியில் தூய்மையான காற்று, நீர் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
உலகில் எப்போதும் காண முடியாத அளவிற்கு மாசு காரணமாக சீனாவும், ரஷ்யாவும் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு மிகவும் மாசுபட்ட ஆண்டாக மாறி உள்ளது. இந்தியாவிற்கு நாம் நிதியுதவி அளித்தும், அவர்கள் நாட்டையே முன்னேற்றி வருகின்றனர். நாமும் தான் நாட்டை வளர்ச்சி பெற வைத்து வருகிறோம்.

சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களின் குப்பைகளை சுத்தம் செய்வதற்கு பதிலாக மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றன. அவர்கள் தங்கள் குப்பைகளை கடலில் கொட்டுகிறார்கள். அவை லாஸ் ஏஞ்சல்ஸ் கடல் பகுதியில் மிதக்கிறது. மற்ற பிரச்னைகளுடன் லாஸ் ஏஞ்சல்சிற்கு இதுவும் புதிய பிரச்னையாக உள்ளது. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் நம்மை குறை கூறுவதுடன், இந்த குப்பைகளை நாம் தான் கொட்டியதாக கூறுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

மூலக்கதை