'காஷ்மீர் விவகாரம் தீர பேச்சுவார்த்தை நடத்துங்க'

தினமலர்  தினமலர்

லண்டன் : ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள, பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசித்தனர்.

இந்தப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, பேச்சு நடத்துமாறு, இந்தியாவையும், பாகிஸ்தானையும் அந்த குழுவினர் அறிவுறுத்தினர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் தெரசா மே, கேமரூன் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரும், ஐக்கிய நாடுகள் சபையில், பிரிட்டனின் பிரதிநிதியாக இருந்தவருமான, மார்க் லியால் கிரான்ட் பேசியதாவது:காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, 2001ல், அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் நடத்திய பேச்சில் வழி ஏற்பட்டது.

ஆனால், அதை பயன்படுத்திக் கொள்ள, இரு நாடுகளும் தவறிவிட்டன.வடக்கு அயர்லாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது போல, காஷ்மீர் பிரச்னைக்கும் தீர்வு காணலாம். இதற்கு, இந்தியாவும், பாகிஸ்தானும், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தியாவை சேர்ந்த, 'டிவி' நிருபர், நிதி ரஸ்தான் கூறுகையில், 'காஷ்மீரை கைப்பற்ற முடியாத ஆத்திரத்தில், அங்கு, பயங்கரவாதம் என்ற மறைமுகப் போரை, பாகிஸ்தான் துாண்டி விடுகிறது, பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளதை, அந்நாட்டு பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார்' என்றார்.

மூலக்கதை