நாடு கடத்தினால் தற்கொலை: நிரவ் மோடி மிரட்டல்

தினமலர்  தினமலர்
நாடு கடத்தினால் தற்கொலை: நிரவ் மோடி மிரட்டல்

லண்டன்: லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.9100 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் நிரவ் மோடி சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 4 ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 வது முறையாக ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


ஏப்ரல் மாதம் மற்றும் சமீபத்தில் என 3 முறை நிரவ் மோடி, சிறைக்குள் தாக்கப்பட்டதாக கூறி ஜாமின் மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதுனை ஏற்க மறுத்த கோர்ட், மீண்டும் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது கோர்ட்டில் பேசிய நிரவ் மோடி, தன்னை இந்தியா அழைத்துச் செல்ல உத்தரவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், இந்தியாவில் தன் மீது நேர்மையான முறையில் விசாரணை நடக்காது எனவும் கூறினார். நிரவ் மோடி வழக்கு தொடர்பான விசாரணை டிச.,4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை