'இந்தியா அமெரிக்கா பேச்சு முழு வீச்சில் உள்ளது'

தினமலர்  தினமலர்
இந்தியா அமெரிக்கா பேச்சு முழு வீச்சில் உள்ளது

வாஷிங்டன்: 'இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, மிகவும் வேகமாக, முழு வீச்சில் நடந்து வருகிறது' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் சந்தித்து ஆலோசனை நடத்தும் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் வாஷிங்டனில் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் முசினை நேற்று சந்தித்து பேசினார்.பின், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு, முழு வீச்சில் நடக்கிறது.

இது தொடர்பாக நம் வர்த்தக துறை அமைச்சர், அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேசி வருகிறார். இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, என்னுடைய தரப்பில் இருந்து கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.இரு தரப்பும், இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளன. அதனால், மிக விரைவில் ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க நிதி அமைச்சர் முசின், அடுத்த மாத துவக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மூலக்கதை