சீனாவில் வெளியேறும் நிறுவனங்கள்; நிர்மலா அழைப்பு

தினமலர்  தினமலர்
சீனாவில் வெளியேறும் நிறுவனங்கள்; நிர்மலா அழைப்பு

வாஷிங்டன்: சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது நிருபர்களை சந்தித்த நிர்மலா கூறியதாவது:
சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். அதன்பின் அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு, இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களிடம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான காரணத்தை முன்வைப்போம்.


மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் இந்தியாவில் தொழில் வாய்ப்பும், சந்தை வாய்ப்பும் அதிகமாக உள்ளது. கூடவே தொழிலாளர் வளமும் இருக்கிறது. எலெட்ரானிக்ஸ், லித்தியம் அயன் பேட்டரிகள், செமி கன்டெக்டர்கள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகஅளவில் வாய்ப்புள்ளது. இதனை அந்த நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மூலக்கதை