இந்திய- அமெரிக்கா வர்த்தகம் உயர்கிறது

தினமலர்  தினமலர்
இந்திய அமெரிக்கா வர்த்தகம் உயர்கிறது

வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதியில் இந்தியா - அமெரிக்கா இடையிலான, பாதுகாப்புத்துறை வர்த்தகம் 18 பில்லியன் டாலரை எட்டும் என பெண்டகன் கூறியுள்ளது.

இது தொடர்பாக, பாதுகாப்புத்துறையின் கொள்முதல் துணை செயலர் எலன் எம்.லார்ட் கூறுகையில், இந்தியா அமெரிக்கா இடையிலான ராணுவம் - ராணுவம் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவை பலப்படுத்தும் அதே நேரத்தில், இந்தியாவுடனான கூட்டணியை வலுப்படுத்தவும் விரும்புகிறோம். 2008 ல் பூஜ்யம் ஆக இருந்த, இருதரப்பு பாதுகாப்புத்துறை வர்த்தகம், இந்த ஆண்டு இறுதியில் 13 பில்லியன் டாலர் ஆக இருக்கும். அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா - அமெரிக்கா தொழில்நுட்ப மற்றும் வர்த்தக குழுவானது, ராணுவ தளவாடங்களின் மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான வாய்ப்புகளை காணவும், அறிவியல் மற்றும் தொழிலநுட்ப திட்டங்களில் ஒத்துழைக்கவும் மற்றும் ராணுவ உறவை மேலும் மேம்படுத்துவதற்கான தேவையான கொள்கை மாற்றங்களை கூட்டாக ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுவின் 9வது கூட்டம், அடுத்த வாரம் டில்லியில் நடைபெற உள்ளது. பென்டகன் இணை பாதுகாப்பு தலைவர் மற்றும் இந்திய பாதுகாப்பு துறை இணை செயலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.



மூலக்கதை