ஹிந்து மாநாடு சீர்குலைப்பு அமெரிக்க நீதிச்மன்றத்தில் வழக்கு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன், :அமெரிக்காவின் சிகாகோ நகரில், கடந்த ஆண்டு நடைபெற்ற, இரண்டாவது சர்வதேச ஹிந்து மாநாட்டை சீர்குலைக்க முயன்ற, ஐந்து பேர் மீது, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அமெரிக்க நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்துள்ளனர்.அமெரிக்காவின் சிகாகோ நகரில், சர்வதேச ஹிந்து மாநாடு, இரண்டாவது ஆண்டாக கடந்த ஆண்டு நடைபெற்றது.இதில், 2,500 பேர் பங்கேற்றனர். மாநாடு நடந்து கொண்டு இருந்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர், இந்தியாவில் சிறுபான்மையினர் மிக மோசமாக நடத்தப்படுவதாக கூச்சலிட்டனர். இது, மாநாட்டின் அமைதியை சீர்குலைத்தது.இது தொடர்பாக, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளை சார்பில், இலினாய்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க பத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மூலக்கதை