முடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி

தினமலர்  தினமலர்
முடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி

லண்டன்: ஐசிசி தொடர்களின் அரையிறுதி, பைனலில் பவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு என்ற முறையை ஐசிசி நீக்கம் செய்துள்ளது.


2019 உலக கோப்பை பைனலில் நியூசி., - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முடிவு 'டை' ஆக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் ஒரே ரன்களை அடிக்க, பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது. இதனையடுத்து, பவுண்டரி அடிப்படையில் வெற்றியாளரை தேர்ந்தெடுத்த முடிவால் சர்ச்சை ஏழுந்தது.


இந்நிலையில், ஐசிசி தொடர்களில் அரையிறுதி, பைனலில் பவுண்டரி அடிப்படையில், போட்டி முடிவு என்ற முறையை ஐசிசி நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக, முடிவை எட்டும் வரை சூப்பர் ஓவர் முறையை பின்பற்றவும் ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசி தொடர்களில் லீக் போட்டிகளில் 'டை' ஆனால், இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இம்முறையையும் நீக்கியுள்ள ஐசிசி., லீக் போட்டிகளுக்கும் சூப்பர் ஓவர் முறையை கொண்டு வந்துள்ளது. ஐசிசி கிரிக்கெட் குழு அளித்த பரிந்துரையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை