கனடாவில் தமிழர் தெருவிழா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கனடாவில் தமிழர் தெருவிழா

ஐந்தாவது வருடமாகத் தமிழர் தெருவிழா ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் மார்க்கம் வீதியில் கொண்டாடப்பட்டது. இம்முறையும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் விழாவுக்கு வந்திருந்தார்கள். தமிழ்ப் பாரம்பரிய நடனங்கள், இசை, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம் போன்ற கலைகள் முக்கியத்துவம் பெற்றன. தமிழரின் வரலாற்றுக் காலவரிசை, தமிழ் பண்பாட்டு உலா, தமிழறிவுப் போட்டி ஆகியவை இடம்பெற்றன. ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டலும் நடந்தது. பல்கலைக்கழக நிறைவேற்று இயக்குநர் லிசா லெமன் விழாவுக்கு வருகை தந்திருந்தார்.

மூலக்கதை