மோடி நிகழ்ச்சி: இந்தியர்கள் உற்சாகம்

தினமலர்  தினமலர்
மோடி நிகழ்ச்சி: இந்தியர்கள் உற்சாகம்

ஹூஸ்டன்: கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது ஹவ்டிமோடி. அமெரிக்கவில், ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மோடியை, இந்தியர்கள், அவரது பெயரை உற்சாகமாக கோஷமிட்டு வரவேற்றனர்.




பிரதமர் மோடி செப்., 21 முதல் 27 வரை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள 'என்.ஆர்.ஜி., கால்பந்து மைதானத்தில்' 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி இன்று(செப்., 22) இரவு நடந்தது வருகிறது . நிகழ்ச்சியின் துவக்கமாக, பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட நடனங்களுடன் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
'கனவுகளை பகிருங்கள்; ஒளிமயமான எதிர்காலம்' என்ற தலைப்பில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்க மேடை ஏறிய மோடி, அனைத்து திசைகளிலும் சென்று, இந்தியர்களை நோக்கி வணங்கினார். மைதானத்தில் இருந்த இந்தியர்களும், ''மோடி... மோடி...'' என உற்சாகமாக கோஷமிட்டனர். ஹூஸ்டன் நகரம் மின்சாரம், விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் அமெரிக்காவின் மையமாக திகழ்கிறது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரமாகவும் விளங்குகிறது. இந்தியா - ஹூஸ்டன் இடையே வர்த்தக உறவு சிறப்பாக உள்ளது.

'ஹவ்டி மோடி'


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது 'என்ன செய்கிறீர்கள்? என நலம் விசாரிப்பதற்கு 'ஹவ்டி' என்பர். அதாவது 'ஹலோ ஹவ் டூ யு டூ' என்ற ஆங்கில வாக்கியத்தின் சுருக்கமே 'ஹவ்டி'. ஹூஸ்டன் வரும் மோடியை நலமா என விசாரிக்கும் விதமாகவே, நிகழ்ச்சிக்கு 'ஹவ்டி மோடி' என பொருத்தமாக பெயர் வைத்தனர்.

நேரலை: மோடி, டிரம்ப் உரை ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

மூலக்கதை