காஷ்மீர் இந்தியாவின் பகுதி: பிரிட்டன் எம்.பி.,

தினமலர்  தினமலர்
காஷ்மீர் இந்தியாவின் பகுதி: பிரிட்டன் எம்.பி.,

லண்டன்: ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என பிரிட்டன் எம்.பி., பாப் பிளாக்மேன் தெரிவித்துள்ளார்.


பிரிட்டன் பிரதமர் பாப் பிளாக்மேன், வடக்கு லண்டன் எம்.பி., யாக உள்ளார். பிரிட்டன் இந்துக்களுக்கான அனைத்து கட்சி பார்லிமென்டரி குழுவின் தலைவராகவும் இருக்கும் இவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக உள்ளார்.

இவர் லண்டனில் காஷ்மீர் பணடிட்கள் சார்பாக நடந்த ‛பாலிதன் திவாஸ்'என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிளாக்மேன் பேசியதாவது:‛ஜம்மு-காஷ்மீ்ர் இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. பிரதமர் மோடியின் அரசால் அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையும், 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையும் நான் மனதார வரவேற்கிறேன். பிரதமர் மோடி தன் சிறப்பான ஆளுமைத் திறனை நிரூபித்துள்ளார்.


வெளியேற வேண்டும்


‛பாக்., இந்த விவகாரத்தை ஐ.நா.,விற்கு கொண்டு செல்வதை நான் கண்டிக்கிறேன். பாக். ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளிலிருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்'.

மூலக்கதை