காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவுங்கள் ஐநா.வுக்கு மலாலா வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவுங்கள் ஐநா.வுக்கு மலாலா வேண்டுகோள்

லண்டன்: பாகிஸ்தானை சேர்ந்த கல்வி உரிமைக்காக போராடும் சமூக ஆர்வலரும்,  நோபல் பரிசு பெற்றவருமான மலாலா, காஷ்மீர் மாணவர்கள் பள்ளி செல்வதற்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். நேற்று முன்தினம் மலாலா தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். காஷ்மீர் மக்களின் குரல்களை கேட்க வேண்டும். அங்குள்ள சிறுவர்கள் பாதுகாப்பாக மீண்டும் பள்ளிக்கு செல்வதற்கு ஐநா உதவ வேண்டும். 41 நாட்களாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் உள்ளனர். பெண்கள் வீடுகளை விட்டு ெவளியே வருவதற்கு கூட அச்சப்பட்டு வாழ்ந்து வருவதாக கூறப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது. உலகில் இருந்து காஷ்மீர் மக்கள் துண்டிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் குரல்களை கேட்க முடியவில்லை.இவ்வாறு மலாலா கூறியுள்ளார்.

மூலக்கதை