கால்பந்து வடிவில் நவீன வீடு!

தினமலர்  தினமலர்
கால்பந்து வடிவில் நவீன வீடு!

மூக, பொருளாதார காரணங்களால் வீடு இழந்தவர்கள், இயற்கை பேரிடர்களால் வீட்டை பறிகொடுத்தவர்கள். இவர்களுக்கு உதவ, சமூக நோக்குள்ள தொழில்கள் உருவாகியுள்ளன. சமீபத்தில், அமெரிக்காவிலுல்ள, லாஸ் வேகாஸ் நகரில் புதுவகையான வீடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது, 'பயோஷிப்' என்ற 'ஸ்டார்ட் - அப்' நிறுவனம்.

கழிவு நீரிலிருந்து கிடைக்கும் உயிரிப் பீங்கான் பொருட்கள் மற்றும் பாஸ்பேட்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் செராமிக் பலகைகளால், வீடுகளை கட்டமைக்கிறது பயோஷிப். இது, 500 ஆண்டுகள் வரை அழியாமல் நிலைத்து நிற்கும் என, இதன் நிறுவனர்கள் சொல்கின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான விஞ்ஞானியான, பக்மின்ஸ்டர் புல்லர், பிரபலப்படுத்திய, 'ஜியோடெசிக் டோம்' என்ற கட்டட அமைப்பை பின்பற்றி பயோஜிப் வீடுகள் கட்டப்படுகின்றன. கால்பந்தின் மேலுறை வடிவில் இருக்கும் இந்த வீடுகள், இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் வலு கொண்டவை; இவற்றை பழுது பார்ப்பதும் எளிது. அரசுகளின் வீட்டுத் திட்டங்கள் இதை ஆதரித்தால், சில நாட்களில், புதிதாக ஒரு பெரிய கிராமத்தை உருவாக்கி, அதில் வீடற்றவர்களை குடியேற்றி விட முடியுமாம், வீட்டுக் கனவு சீக்கிரம் நிறைவேற, விஞ்ஞானம் உதவிக்கரம் நீட்டுகிறது.

மூலக்கதை