'இந்திய மாணவர்கள் 5 விஷயங்களை மறக்க கூடாது'

தினமலர்  தினமலர்
இந்திய மாணவர்கள் 5 விஷயங்களை மறக்க கூடாது

லிதுவேனியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், தாய், தந்தை, குரு, தாய்நாடு, தாய்மொழி ஆகிய ஐந்து விஷயங்களை மறந்துவிடக் கூடாது என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இருநாட்டு உறவுதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஐரோப்பிய நாடுகளான, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியாவுக்கு, ஐந்து நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.முதலில், லிதுவேனியா சென்றுள்ள அவர், தலைநகர் வில்னியசில், அந்நாட்டு அதிபர், கிதானஸ் நவ்செடாவை, நேற்று முன்தினம் சந்தித்து, இருநாட்டு உறவு குறித்து, விரிவாக விவாதித்தார்.இந்நிலையில், லிதுவேனியாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில், நேற்று உரையாற்றினார்.அப்போது, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசியதாவது:இந்தியா - லிதுவேனியா இடையே, வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும். கலாசாரம்குறிப்பாக, 'லேசர்', புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, உணவு உற்பத்தி மற்றும் உயிரி அறிவியல் ஆகிய துறைகளில், லிதுவேனியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.சர்வதேச அளவில், சுலபமாக வர்த்தகம் செய்யக்கூடிய, 190 நாடுகளின் பட்டியலை, உலக வங்கி வெளியிட்டது. அதில், இந்தியா, 77வது இடத்தில் உள்ளது.இந்திய கலாசாரம், தத்துவம், கலை மற்றும்ஆன்மிகத்தை, லிதுவேனியமக்கள் பெரிதும் போற்றுகின்றனர். மகிழ்ச்சிஅதற்கு இங்கு வசிக்கும், இந்தியர்களே காரணம். நம் நாட்டின் பெருமைகளை அனைவருக்கும் பரப்புங்கள்.இங்கு வசிக்கும் இந்தியர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை, வலுப்படுத்த வேண்டும்.லிதுவேனியா பல்கலைக் கழகங்களில் வந்து படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது.நெருங்கிய தொடர்புநீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று படியுங்கள். ஆனால், தாய்மொழியையும், தாய் நாட்டையும் மறந்துவிடக் கூடாது.மாணவர்கள், தாய், தந்தை, குரு, தாய்மொழி மற்றும் தாய்நாடு ஆகிய ஐந்து விஷயங்களை, எந்நிலையிலும், மறந்துவிடக் கூடாது.இந்தியா - லிதுவேனியா இடையே, எப்போதும் நெருங்கிய உறவு உண்டு. லிதுவேனியா மொழி - சமஸ்கிருதம் இடையே, 100க்கும் மேற்பட்ட வார்த்தைகள் நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.
- நமது நிருபர் -

மூலக்கதை