பொன்விழா படங்கள்: நிறைகுடம்

தினமலர்  தினமலர்
பொன்விழா படங்கள்: நிறைகுடம்

உதிரிபூக்கள் மகேந்திரன் கதை சினிமாவானது சிறிய பட்ஜெட்டல் அழகான, அழுத்தமான படங்களை கொடுத்தவர் முக்தா சீனிவாசன். இவர் இயக்கும் படங்கள் அனைத்ததையும், இவரது அண்ணன் முக்தா ராமசாமி தயாரிப்பார். அப்படி உருவான படங்களில் ஒன்று தான் நிறைகுடம். சிவாஜி, முத்துராமன், வாணிஸ்ரீ, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, சோ, மனோரமா, சச்சு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வி.குமார் இசை அமைத்திருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார், எம்.கர்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்ட இயக்குனர் மகேந்திரன் அப்போது திரைப்படங்களுக்கு கதை எழுதி கொடுத்து வந்தார். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரபிள்ளை படங்களுக்கு கதை எழுதிய மகேந்திரன் எழுதிய நிறைகுடம் கதையை முக்தா சீனிவாசன் சினிமாவாக்கினார். இந்த படமும் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது.

"ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்...." என்று கண்ணதாசன் தான் எழுதிய பாடலில் "நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்..." என்றும் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு தூய்மையான படமாக நிறைகுடம் அமைந்தது.

மூலக்கதை