சீன கம்யூனிஸ அரசு மேலும் மேலும் ஜனநாயகவாதிகளை ஒடுக்குகிறதா?

தினமலர்  தினமலர்
சீன கம்யூனிஸ அரசு மேலும் மேலும் ஜனநாயகவாதிகளை ஒடுக்குகிறதா?

பீஜிங் : 1989-ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள டியானென்மென் ஸ்கொயர் பகுதியில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.


சீனப்படை இவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. இது பெரும் வன்முறையாக மாற, இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவுப் போராளிகள் கொல்லப்பட்டனர். அப்போது இது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி உலகம் முழுக்க பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. டாங்க் மேன் என அழைக்கப்படும் ஜனநாயக புரட்சியாளர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் போராட்டம் சீன ஜனநாயக ஆதரவாளர்களின் முக்கியமான போராட்ட நிகழ்வாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இதில் மரணம் அடைந்தவர்களது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை சீன அரசு வெளியிடவில்லை. இவர்களது கல்லறைகளில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மலர் துவி மரியாதை செலுத்துவது வழக்கம்.


தற்போது கொரோனா தாக்கம் காரணமாக வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இரங்கல் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஹாங்காங் மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே சீன கம்யூனிஸ அரசு ஹாங்காங்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து ஹாங் காங் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த இரங்கல் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஹாங்காங் மக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

டியானென்மென் படுகொலை உலக ராணுவப்படை கொலைவெறித் தாக்குதல்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மக்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறைகளின் உச்சமாகத் திகழும் இந்த படுகொலை ஆண்டுதோறும் நினைவுகூறப்படுவதை மறைக்க சீன அரசு திட்டமிட்டு செயல்படுவதாக ஜனநாயக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மூலக்கதை