சீன மாணவர்களுக்கு அமெரிக்கா தடை

தினமலர்  தினமலர்
சீன மாணவர்களுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், படிப்பதற்காக அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சீனாவின் நலனுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துகளை திருடிவதாக அவர்கள் மீது வெள்ளை மாளிகை குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களின் நடவடிக்கையால், அமெரிக்க நலனுக்கு அச்சறுத்தல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இதனால், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இது ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் பதிலடிகளில் ஒன்றாக இருக்கும் என அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 3.60 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் மூலம் பல்லை மற்றும் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும், 14 பில்லியன் டாலர் கட்டணமாக கிடைக்கிறது.

சிறப்பு சலுகை ரத்து




வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஹாங்காங் தொடர்பாக சீனா கொண்டு வந்துள்ள சட்டம், அந்த நகரத்தின் நீண்ட கால பெருமை மற்றும் தனித்துவத்தை அழிப்பது போல் உள்ளது. இது ஹாங்காங் மக்களுக்கும், சீன மக்களுக்கும், உலக மக்களுக்கும் துயரமான நாள். ஹாங்காங்கிற்கு அமெரிக்கா வழங்கி வந்த சிறப்பு சலுகைகளை வழங்கும் கொள்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். எனக்கூறினார்.

மூலக்கதை