கனடாவில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
கனடாவில் ஒரே நாளில் 906 பேருக்கு கொரோனா

ஒட்டாவா : கொரோனா பாதிப்பு அதிகரித்து கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 906 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்புகள் 1000 க்கு குறைவாக பதிவாகி உள்ளது. இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், நாட்டில் நோய் பரவுதலை கட்டுப்படுத்தவும், நோயின் தாக்கத்தால் முடங்கிய கனடியர்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் கனடாவில் நோய் பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 906 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டின் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,418 ஆக அதிகரித்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் 102 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலிகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது (சராசரியாக 6979) ஆக உள்ளது.


கனடாவின் பாதிப்புகளில் அதிகபட்சமாக கியூபெக் மாகாணங்களில் அதிக தொற்று உறுதிசெய்யப்பட்டது. இங்கு 41 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 530 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. கியூபெக்கில் மட்டுமே இதுவரை 50,232 பேர் பாதிக்கப்பட்டனர். 4,363 பேர் பலியாகினர். 15,908 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கியூபெக்கை தொடர்ந்து, ஒன்ராறியோவில் ஒருநாளில் 344 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 27,210 பேர் பாதிக்கப்பட்டனர். அத்துடன் அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நோவா ஸ்காட்டியோ போன்ற பல்வேறு நகரங்களிலும் நோய் தொற்று பதிவாகியுள்ளது. நாட்டில்மொத்தமாக இதுவரை 47,518 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை