ஸ்பெயினில் கொஞ்சம் ‘பெட்டர்’

தினகரன்  தினகரன்
ஸ்பெயினில் கொஞ்சம் ‘பெட்டர்’

ஸ்பெயின் நாட்டு சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், `நாட்டில் நேற்று புதிதாக 5,756 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 728 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரம், நேற்று முன்தினம் 6,180 பேருக்கு தொற்று இருந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 757 ஆக இருந்தது. கடந்த 2 நாட்களாக பலி, பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்டு, 15 ஆயிரத்து 283 பேர் இறந்துள்ளனர். 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர்,’ என கூறப்பட்டுள்ளது.விமான டிக்கெட் முன்பதிவில் அநீதி:கொரோனாவை தடுக்க வரும் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என மத்திய அரசு முடிவு எடுக்காத நிலையில், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் 15ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவு செய்து பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளது.  ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் (சிஏபிஏ) முன்பதிவுக்கு அனுமதித்துள்ள விமான நிறுவனங்களை குற்றம்சாட்டி அறிக்கை விடுத்துள்ளது. அதில், `‘ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்காத நிலையில் பயணிகள் விமான போக்குவரத்து முன்பதிவு தொடங்கி இருப்பது வாடிக்கையாளர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்’’ என குற்றம்சாட்டியுள்ளது.

மூலக்கதை