ஊரடங்கை மீறிட்டேன் நான் ஒரு முட்டாள்: தன்னையே திட்டிக் கொண்ட அமைச்சர்

தினகரன்  தினகரன்
ஊரடங்கை மீறிட்டேன் நான் ஒரு முட்டாள்: தன்னையே திட்டிக் கொண்ட அமைச்சர்

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ஊரடங்கு விதியை மீறி குடும்பத்தினருடன் கடற்கரைக்கு செல்ல 20 கி.மீ. காரை ஓட்டி சென்றதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் டேவிட் கிளார்க் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, தன்னைத் தானே முட்டாள் என்று விமர்சித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்தார். ஆனால், அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த பிரதமர், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, இணை அமைச்சராக நியமித்துள்ளார். டேவிட் கிளார்க் தற்போது நிதித்துறை இணை அமைச்சராக இருக்கிறார்.

மூலக்கதை