அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி INO4800 கண்டுபிடிப்பு : தடுப்பூசி பரிசோதனைக்காக திடகாத்திரமான உடல்நலம் கொண்ட 40 பேர் தேர்வு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி INO4800 கண்டுபிடிப்பு : தடுப்பூசி பரிசோதனைக்காக திடகாத்திரமான உடல்நலம் கொண்ட 40 பேர் தேர்வு

வாஷிங்டன் : கொரோனா வைரஸைத் தடுக்க INO - 4800 என்ற தடுப்பூசியை பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பரிசோதனை செய்ய உள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும்  13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் 75,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில்  பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இனோவியா பார்மாசூட்டிக்கல் நிறுவனம் INO4800 என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பில்கேட்ஸுடைய அறக்கட்டளை பரிசோதனை செய்ய உள்ளனர்.இந்த தடுப்பூசி சோதனைக்கு திடகாத்திரமான உடல்நலம் கொண்ட 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பில் கேட்ஸ் நிதியளித்து தயார் செய்யப்பட்ட  INO4800 கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி முதல் நபருக்கு பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் Missouriல் தான் இந்த பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 40 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.பின்னர் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.இந்த பரிசோதனை ஆராய்ச்சி சிறப்பாக நடந்தாலும், தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்கு ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தன்னார்வலருக்கும் நான்கு வார இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சோதனை செய்யப்படும் இது 2வது தடுப்பூசியாகும். மசாசூசேட்சை சேர்ந்த நிறுவனம் ஏற்கனவே தடுப்பூசி சோதனையில் இறங்கியுள்ளது. 

மூலக்கதை