குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை

வாஷிங்டன்:  மத்திய பாஜ அரசு நேற்றிரவு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதாவை ‘தவறான திசையில் ஆபத்தான திருப்பம்’ என்று சர்வதேச மத சுதந்திரம் குறித்த மத்திய அமெரிக்க ஆணையம் கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில், நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் முன்மொழியப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள இந்து, சீக்கிய, பவுத்த,  சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள், டிசம்பர் 31, 2014 வரை, அங்கு மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இருந்தால், அவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்; இந்திய குடியுரிமை  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், சர்வதேச மத சுதந்திரம் குறித்த மத்திய அமெரிக்க ஆணையம் (யுஎஸ்சிஐஆர்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படுவது  குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக கூறி உள்ளது.
ேமலும், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற முதன்மைத் தலைவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்க  அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

இம்மசோதா மிகவும் கவலை அளிக்க கூடியதாக உள்ளது.

 புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான பாதையை குறிப்பாக முஸ்லிம்களை விலக்கி, மதத்தின் அடிப்படையில் குடியுரிமைக்கான சட்ட  அளவுகோலை இந்த மசோதா அமைக்கிறது.

குடியுரிமை திருத்த மசோதா என்பது தவறான திசையில் ஒரு ஆபத்தான திருப்பம்; இது இந்தியாவின் மதச்சார்பற்ற பன்மைத்துவ வரலாறு மற்றும் இந்திய அரசியலமைப்பை எதிர்த்து இயங்குகிறது’  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை