தோல்விகளுக்கு பொறுப்பல்ல : டிரம்ப்புக்கு இம்ரான் பதில்

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: உங்கள் தோல்விகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என டிரம்பிற்கு பாக். பிரதமர் இம்ரான்கார் பதிலளித்துள்ளார்.டிரம்பின் புகார்களுக்கு அவர் டுவிட்டரில் அளித்துள்ள பதில்கள்: 9/11 தாக்குதலில் எந்த பாகிஸ்தானியருக்கும் தொடர்பில்லை. இருப்பினும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது பாகிஸ்தான். இதில் 75,000 உயிர்களை இழந்துள்ளோம். எங்கள் பழங்குடியினர் வாழும் பகுதிகள் நாசமானது. லட்சக்கணக்கானோர் வீடிழந்து அகதிகளாகினர். சாதாரண பாகிஸ்தானியரின் ரத்தம் உறிஞ்சப்பட்டது.123 பில்லியன் டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க உதவி வெறும் 20 பில்லியன் டாலர்கள்தான். அமெரிக்காவுக்கு தொடர்பு வசதிகளைப் வழங்கி வருகிறோம். வேறு எந்த நாடும் இவ்வளவு உதவியது கிடையாது.ஒரு லட்சத்து 40 ஆயிரம் நேட்டோ வீரர்கள், 2 லட்சத்து 50 ஆயிரம் ஆப்கன் வீரர்கள், ஒரு ட்ரில்லியன் டாலர் செலவு செய்தும் தலிபான்களை அழிக்க முடியவில்லை. இது உங்களின் தோல்வி. இதற்கு எங்களை காரணமாக கூற வேண்டாம். இவ்வாறு ட்விட்டரில் இம்ரான்கான் குமுறியுள்ளார்.

மூலக்கதை