உலகம் -சில வரி செய்திகள்

தினமலர்  தினமலர்

'என்கவுன்டரில்' 7 வீரர்கள் கொலை
இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து நுழைந்த பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பாகிஸ்தான் ராணுவத்தின், ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், ஒன்பது பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு!
தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடான ஈரானில் நடந்த ராணுவ அணிவகுப்பின்போது, நான்கு பேர் அடங்கிய கும்பல், திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டது. இதில், அணிவகுப்பை பார்க்க வந்திருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்கள் என, 29 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய, நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சுறாமீன்கள் சுட்டுக் கொலை
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள, புகழ்பெற்ற நீர் சுற்றுலா தலத்தில், சுற்றுலா பயணியரை, சில சுறா மீன்கள் தாக்கியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களில் மட்டும், தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும், நான்கு சுறா மீன்கள் கொல்லப்பட்டன.'இம்ரான் அவசரப்படுகிறார்'இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையே நடப்பதாக இருந்த அமைதி பேச்சை, இந்தியா ரத்து செய்தது. இதற்கு, அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், 'துாதரக உறவு விஷயத்தில் பிரதமர் இம்ரான் கான் ரொம்ப அவசரப்படுகிறார். மற்ற நாடுகளான உறவு, சவாலானது; அதில் அவசரப்படக் கூடாது' என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.காந்தியின் கடிதம் ஏலம்!பாஸ்டன்: கதர் ஆடைகளை நுாற்பது குறித்தும், நுால்களை தயாரிக்கும் ராட்டை குறித்தும், மஹாத்மா காந்தி எழுதிய கடிதம், 4.59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு, மஹாத்மா காந்தி எழுதிய, தேதி குறிப்பிடப்படாத அந்தக் கடிதத்தை, அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஏல நிறுவனம் ஏலத்துக்கு விட்டது.பலாத்காரம்: 9 பேருக்கு துாக்கு!டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடான ஈரானில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, ஒன்பது பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வீட்டில் இருந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த அவர்களுக்கு, துாக்கு தண்டனை விதித்து, ஈரான் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.12 பேர் கடத்தல்ஜெனீவா: ஆப்ரிக்க நாடான நைஜீரியா அருகே, கடலில் சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு கப்பலை சுற்றி வளைத்த கடற்கொள்ளையர்கள், கப்பலில் இருந்த, 12 பேரைக் கடத்தி சென்றுள்ளதாக, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. அவர்களை மீட்க உதவும்படி, சுவிட்சர்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது.'கிரீன் கார்டு' ரத்துவாஷிங்டன்: அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர்களுக்கு, உணவு மற்றும் நிதி உதவி போன்ற சலுகைகளை, அமெரிக்க அரசு வழங்கி வருகிறது. 'இந்த சலுகைகளை பெறுபவர்கள் அல்லது எதிர்காலத்தில் பெற விரும்புபவர்களுக்கு, 'கிரீன் கார்டு' எனப்படும், நிரந்தர குடியுரிமை நிராகரிக்கப்படும்' என, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு, தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அமெரிக்க பார்லி., விசாரணைவாஷிங்டன்: அமெரிக்காவில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக, அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்துஉள்ள, பிரட் கவானாஹ் மீது, ஒரு பெண், பாலியல் பலாத்கார குற்றம் சுமத்தியுள்ளார். அந்த பெண்ணிடம், அமெரிக்க பார்லிமென்டின் செனட் நீதி கமிட்டி, வரும், ௨௭ல் விசாரிக்க உள்ளது.

மூலக்கதை