3 நிமிடத்தில் 1 மில்லியன் டொலர் திருட்டு!

PARIS TAMIL  PARIS TAMIL
3 நிமிடத்தில் 1 மில்லியன் டொலர் திருட்டு!

மெக்சிக்கோவில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று பணத்தை ஏற்றிவந்த வண்டியை மறித்து 3 நிமிடத்தில் 1 மில்லியன் டாலரைத் திருடியுள்ளது.

 
நேற்று இரவு 1 மில்லியன் டாலர் கொண்ட வாகனம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் விமான நிலையத்திற்குச் சென்றபோது அந்தச் சம்பவம் நடந்தது.
 
திருடர்கள் மிக விரைவாகச் செயல்பட்டதாகவும், அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
திருடப்பட்ட தொகை தொடர்பாகக் காவல்துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
 
மெக்சிகோவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.

 

மூலக்கதை