கொல்கத்தா அணியிடம் படுதோல்வியடைந்த பஞ்சாப் அணி!
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல்., லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல்., லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில், களத்தடுப்பை தெரிவு செய்தது.
தனது 100வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சுனில் நரைன், 9 பந்தில் 3 சிக்சர் 1 பவுண்டரி என அதிரடியாக 24 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் கிறிஸ் லின் (10) நிலைக்கவில்லை.
அடுத்து வந்த ரானா (63) அரைசதம் அடித்து வெளியேறினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா அரைசதம் கடந்தார். தொடர்ந்து வந்த ரசல், ருத்ரதாண்டவமாடினார். இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் எடுத்தது.
இப்போட்டியில் 17 சிக்சர்கள் விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடித்து புது சாதனை படைத்தது.
முன்னதாக அந்த அணி கடந்த 2018ல் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 15 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களான ராகுல் (1), கிறிஸ் கெயில் (20) ஏமாற்றினர்.
தொடர்ந்து வந்த மாயங்க் அகர்வால் (58) அரைசதம் அடித்து அவுட்டானார். பின் வந்த சர்ப்ராஜ் கான் (13) நிலைக்கவில்லை.
கடைசி நேரத்தில் மந்தீப் சிங் (33*), மில்லர் (59*) எவ்வளவு போராடிய போதும் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து.
இதனால் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
