ஜாதவ் வழக்கு: சர்வதேச கோர்ட்டில் இந்தியா வாதம்

தினமலர்  தினமலர்
ஜாதவ் வழக்கு: சர்வதேச கோர்ட்டில் இந்தியா வாதம்

ஹாகுவே: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அந்நாட்டு கோர்ட் மரணத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து இந்தியா தரப்பில் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீது விசாரணை இன்று நடந்தது.



இந்தியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாரீஸ்சால்வே தனது விவாதத்தில் : குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்பில்லாத குற்றச்சாட்டை கூறி வந்துள்ளது. இதனை பாக்., ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக கையாள்கிறது. போதிய ஆதாரங்கள் ஏதுமில்லை.


ஜாதவ்வை சந்திக்க இந்திய தரப்பிலான வக்கீலுக்கு அனுமதி அளிக்கவில்லை. வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது. ஜாதவ்வை சந்திக்க இந்திய தூதரகம் சார்பில் 13 முறை நினைவூட்டப்பட்டது. ஆனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. 130 கோடி இந்திய மக்களின் உணர்வை புரிந்து சர்வதேச கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு சால்வே வாதிட்டார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, கடந்த 2016 ல் குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, ஐ.நா.,வின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து குல்பூஷனின் மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
குஷ்பூஷணின் வழக்கை இன்று முதல் (பிப்., 18 ) முதல் 21ம் தேதி வரை சர்வதேச நீதிமன்றம் விசாரணை செய்கிறது.

மூலக்கதை