அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிரம்ப்!

PARIS TAMIL  PARIS TAMIL
அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிரம்ப்!

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, சென்ற ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாஷிங்டனின் வேண்டுகோளுக்கிணங்கி அவர் அவ்வாறு பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டது.
 
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் உச்சநிலை மாநாட்டில் அதிபர் டிரம்ப்பின் பங்களிப்புக்காகத் திரு. அபே அந்தப் பரிந்துரையை முன்வைத்தார்.
 
Asahi Shimbun நாளேடு பெயர் குறிப்பிடாத ஜப்பானிய அரசாங்க அதிகாரியை மேற்கோள்காட்டி அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
 
திரு. அபே தம்மை நோபெல் பரிசுக்குப் பரிந்துரைத்ததாக, சென்ற வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
 
கொரியத் தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி ஜப்பானியப் பிரதமர் திரு. டிரம்ப்புக்குக் கடிதம் எழுதியதாகவும் கூறப்பட்டது.
 
அமெரிக்க அதிபரின் கூற்று குறித்து அறிந்திருப்பதாகக் கூறிய ஜப்பானிய வெளியுறவு அமைச்சு, அதுகுறித்துக் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
 

மூலக்கதை