பிரிட்டன் அரச குடும்பத்தில் குழப்பமா

தினமலர்  தினமலர்
பிரிட்டன் அரச குடும்பத்தில் குழப்பமா

லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சலுக்கு 'வாட்ஸ்ஆப்' மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.இரண்டாம் எலிசபெத் ராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ். இவருக்கும் மறைந்த டயானாவுக்கும் இரண்டு மகன்கள் வாரிசு. மூத்தவரான இளவரசர் வில்லியம்-கேட் திருமணம் 2011ல் நடந்தது. இளையவரான ஹாரி -நடிகை மேகன் மார்க்லே திருமணம் இந்த ஆண்டு அரங்கேறியது.தற்போது அண்ணன், தம்பி குடும்பத்துக்கு இடையே உரசல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. கேட், மேகன் இடையே நல்லுறவு இல்லை என செய்திகள் வெளியாகின. இதனை மறுக்கும் விதமாக இரு குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து 'வாட்ஸ்ஆப் குரூப்' அமைத்துள்ளனர். குழந்தைகளின் படங்கள், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.இது குறித்து அரசு குடும்பத்துக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கேட், மேகன் இடையே சண்டை எதுவும் இல்லை. நல்லுறவு உள்ளது. அரசு குடும்பத்தினர் அலைபேசி பயன்படுத்துவது மிகவும் அரிது. வீண் வதந்திகளை தகர்ப்பதற்காக, குடும்ப உறுப்பினர்களுக்காக 'வாட்ஸ்ஆப் குரூப் சாட்' துவக்கியுள்ளனர். குழந்தைகளின் படங்களை அனுப்பி மகிழ்கின்றனர். தங்களது கணவர்கள் பற்றிய வேடிக்கையான 'மீம்ஸ்'களை பகிர்ந்து கொள்கின்றனர். மொத்தத்தில் மகிழ்ச்சியாக உள்ளனர்,''என்றார்.

மூலக்கதை