பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று ஆரம்பம்

தினமலர்  தினமலர்
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்று ஆரம்பம்

லண்டன் : பெண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் இன்று துவங்குகிறது. ஆக., 5 வரை நடக்கவுள்ள இத்தொடரில், 'நடப்பு சாம்பியன்' நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன. 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.

மூலக்கதை