ரயில் தடம் புரண்டு துருக்கியில் 10 பேர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரயில் தடம் புரண்டு துருக்கியில் 10 பேர் சாவு

டெகிர்டாக்: துருக்கி, எடிர்னே மாகாணத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், இஸ்தான்புல் நோக்கி சென்றது. ரயிலில் 362 பயணிகள் மற்றும் 6 ரெயில்வே ஊழியர்கள்  பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், சரிகார் கிராமம் அருகே சென்ற போது, ரயில் திடீரென கவிழ்ந்ததில் 10 பயணிகள் உயிரிழந்தனர்.

மேலும் 73 பயணிகள்  படுகாயமடைந்தனர்.

டெகிர்டாக் வடமேற்கு மாகாணத்தில் நிகழ்ந்துள்ள இந்த விபத்தில், படுகாயமடைந்தவர்களை மீட்க 100 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.

ரயில் விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவின்  காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை