ஹவாய்த் தீவில் எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பு வழிந்தோடியதில் 82 வீடுகள் எரிந்து இறுகியது

தினகரன்  தினகரன்
ஹவாய்த் தீவில் எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பு வழிந்தோடியதில் 82 வீடுகள் எரிந்து இறுகியது

ஹோனோலுலு: ஹவாய்த் தீவில் கிலோவா எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பு வழிந்தோடியதில் 82 வீடுகள் எரிந்து பாறையாக இறுகின. பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலோவா எரிமலை உள்ளது. 1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. அந்த கிலோவா எரிமலை கடந்த ஒரு மாதமாக வெடித்துக் குமுறிப் பாறைக் குழம்பைக் கக்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகமாகப் பாறைக் குழம்பைக் கக்கியதில் அது வழிந்தோடி அப்பகுதியில் உள்ள 82 வீடுகளை எரித்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு ஏதுமில்லை. ஹவாய்த் தீவில் எரிமலை வெடித்த பகுதிகளில் இருந்து நாலாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மூலக்கதை