கொரிய அதிகாரிகள் உயர்மட்ட பேச்சு இன்று துவக்கம்

தினமலர்  தினமலர்

சியோல்: தென், வட கொரிய அதிகாரிகள் உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று துவங்குகிறது.கொரிய தீபகற்பத்தில் இருந்த மோதல் தணிந்து அமைதி சூழல் உருவாகி வருகிறது. தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கிற்கு வடகொரியா சார்பில் அதிபரின் சகோதரி கலந்து கொண்டதையடுத்து இரு நாடுகளுக்கும் நட்பு துளிர்த்துள்ளது. இரு நாடுகளின் அதிகாரிகள் பங்கேற்கும் உச்சி மாநாடு சியோலில் இன்று துவங்க உள்ளது. வெளிப்பார்வைக்கு உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனையாக இது கருதப்பட்டாலும், அடுத்த மாதம் டிரம்ப்புடன் பேச வேண்டிய விஷயங்களே இதில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு கொரிய அதிபர்களும் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.கொரிய அமெரிக்கா--வடகொரியா இடையே இருந்த மோதல் போக்கை மாற்றியதில் தென்கொரியா முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - தென் கொரிய அதிபர் மூன் ஜேன் இன் ஆகியோர் நேரடியாக பேசும் விதத்தில் ஹாட்லைன் தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஹாட்லைனில் நேற்று சோதனை நடைபெற்றது. இருநாடுகளின் உயரதிகாரிகளும் சுமார் 4 நிமிடங்கள் பேசினர்.

உலகளாவிய அமைதி நடவடிக்கைகளில் இது முக்கிய கட்டமாக கருதப்படுகிறது. இதை வரவேற்று தென்கொரியா முழுவதும் மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை