முகாபேவுக்கு சம்மன்

தினமலர்  தினமலர்

ஹராரே: ஆங்கிலேயே ஆதிக்கத்தில் இருந்த ஜிம்பாப்வே விடுதலை பெற போராடியவர் ராபர்ட் முகாபே. 1980-ல் சுதந்திரமடைந்தபின் அதிபராக பதவியேற்றார். சமீப காலமாக அவர் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடுத்த அதிபர் பதவிக்கு தனது மனைவி கிரேஸை முகாபே முன்னிறுத்தினார். இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து, அவரை சிறைபிடித்த ராணுவம், வீட்டுக்காவலில் வைத்தது. முகாபே பதவி விலகினார். அவரது ஆட்சிக் காலத்தின் போது 1500 கோடி டாலர் மதிப்பிலான வைரங்கள் காணாமல் போனது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மே 9ல் ஆஜராகுமாறு முகாபேக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

மூலக்கதை