பிட்காயின் மோசடி நபர் பிரதமர் விமானத்தில் தப்பி ஓட்டம்

தினமலர்  தினமலர்
பிட்காயின் மோசடி நபர் பிரதமர் விமானத்தில் தப்பி ஓட்டம்

ஸ்டாக்ஹோம், பிட்காயின் மோசடியில் கைது செய்யப்பட்டு ஐஸ்லாந்து சிறையில் இருந்து தப்பிய நபர், அந்நாட்டு பிரதமர் சென்ற விமானத்திலேயே தப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்டை நாட்டு பிரதமர்கள் ஸ்வீடன் வந்துள்ளனர்.ஐஸ்லாந்தை சேர்நதவர் சின்ட்ரி தோர் ஸ்டீபன்சன். பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்படும் 600 கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து பலகோடி ரூபாய்களை மோசடி செய்ததாக இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அண்மையில் உள்நாட்டு கலவரத்தின்போது ஐஸ்லாந்து சிறை உடைக்கப்பட்டது. இதில் ஸ்டீபன்சனும் தப்பினார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் ஜேகோப்ஸ்டேட்டர் சென்ற விமானத்திலேயே ஸ்டீபன்சனும் ஸ்வீடனுக்கு தப்பி சென்றுவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ஸ்டீபன்சனின் படத்தை அனுப்பி அவரை பிடித்து ஒப்படைக்குமாறு ஸ்வீடன் போலீசாருக்கு ஐஸ்லாந்து போலீசார் கேட்டுள்ளனர்.

மூலக்கதை