50 மில்லியன் பயனீட்டாளர்களின் அந்தரங்கத் தகவல்கள் ஊடுருவல்! மௌனம் காக்கும் பேஸ்புக்

PARIS TAMIL  PARIS TAMIL
50 மில்லியன் பயனீட்டாளர்களின் அந்தரங்கத் தகவல்கள் ஊடுருவல்! மௌனம் காக்கும் பேஸ்புக்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழுவோடு தொடர்புடைய அரசியல் தகவல் நிறுவனம் எப்படி 50 மில்லியன் Facebook பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஊடுருவியது என்று அமெரிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
 
அரசியல் ஆதத்துக்காக 50 மில்லியன் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டதைப் பற்றி Facebook நிறுவனம் எந்த அளவிற்கு அறிந்துள்ளது என்று தலைவர் மார்க் ஸக்கர்பர்க் விளக்கம் அளிக்க வேண்டுமென, அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் Amy Klobuchar கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Cambridge Analytica எனும் அரசியல் தகவல் நிறுவனம் Facebook பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு வாக்காளர் போக்கை மாற்றும் முறையை உருவாக்கியுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ், ஓரிரு நாட்களுக்குமுன் தகவல் வெளியிட்டது.
 
திரு. டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு அந்தத் தொழில்நுட்பமுறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
தகவல்கள் ஊடுருவப்பட்டதை Facebook நிறுவனம் அதன் பயனீட்டாளர்களுக்குத் தெரிவிக்கவில்லை.
 
அவ்வாறு செய்யத் தவறியது நிரூபிக்கப்பட்டால், அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் பிரிட்டனிலும் அது சட்ட-மீறலாகக் கருதப்படும்.  
 

மூலக்கதை