ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு ...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

  கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. என்னென்னவோ செய்தும் போராட்டத்தைக் கலைக்க வழியில்லாத அரசு, கடைசியில் காவல்துறையை வைத்து தடியடி நடத்தி கலைத்தது.

இதனால், பயங்கர வன்முறை வெடித்தது.   இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய நீதிபதி, நேற்று சேலம் சென்றார்.   பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நீதிபதி, “ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக இதுவரை 1951 பேர் பிரமாணப் பத்திரம்  அனுப்பியுள்ளனர்.

இவர்களில் 447 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 108 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.

போராட்டத்தின்போது பணியில் இருந்த காவலர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல, போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட இருக்கின்றனர்.

.

மூலக்கதை