ஒலிம்பிக் தீபம் அணைந்ததா? ரகசியத்தை அம்பலப்படுத்திய அதிகாரி

தினமலர்  தினமலர்
ஒலிம்பிக் தீபம் அணைந்ததா? ரகசியத்தை அம்பலப்படுத்திய அதிகாரி

டோக்கியோ : கடந்த, 1964 முதல், அணையாமல் பாதுகாக்கப் பட்டு வந்த ஒலிம்பிக் போட்டி தீபம், ஜப்பானில், நான்கு ஆண்டுக்கு முன், அணைந்து, மீண்டும் ஏற்றப்பட்ட தகவல் அம்பலமாகி உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும் டார்ச்சில், தீபம் ஏற்றப்பட்டு, 1964 முதல், அணையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வரும், 2020ல், ஒலிம்பிக் போட்டி நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள ஜப்பானிடம், ஒலிம்பிக் டார்ச், நான்கு ஆண்டுக்கு முன் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த, 2013 நவம்பரில், ககோஷிமா நகரில் உள்ள விளையாட்டு பயிற்சி அரங்கில் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த டார்ச், எதிர்பாராத விதமாக அணைந்து விட்டதாக, ஜப்பான் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் பின், அவசரமாக, அந்த டார்ச், மீண்டும் ஒளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஒலிம்பிக் டார்ச்சில் இருந்த தீபம் அணைந்து போனதை, என் கண்ணால் பார்த்தேன். அதன் பின், அந்த டார்ச், அவசரமாக ஒளி ஏற்றப்பட்டது. 'இதுபற்றி வெளியே கூறினால், மக்கள் மனம் புண்படும் எனக் கருதியதால், அப்போது, அது பற்றி கூறாமல் இருந்து விட்டேன்' என்றார்.

மூலக்கதை