'லெகிங்க்ஸ்' பெண்களுக்கு விமானத்தில் தடை

தினமலர்  தினமலர்
லெகிங்க்ஸ் பெண்களுக்கு விமானத்தில் தடை


வாஷிங்டன் அமெரிக்காவில், 'லெகிங்க்ஸ்' எனப்படும், இறுக்கமான, 'பேன்ட்' அணிந்து வந்த, இரண்டு இளம்பெண்கள், விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள, டெனோவர் நகரில் இருந்து, மினியாபோலிஸ் நகருக்கு, 'யுனைடெட்' நிறுவன விமானத்தில் செல்ல, இரண்டு இளம்பெண்கள் வந்தனர். லெகிங்க்ஸ் அணிந்து வந்ததால், அவர்களை விமானத்திற்குள் அனுமதிக்க, ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
'ஆடைகளுக்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதால், 'லெகிங்க்ஸ்' அணிந்து வர தடை உள்ளது' என, விமான ஊழியர்கள் கூறினர். இது குறித்த தகவல் வெளியானதும், 'யுனைடெட் விமான நிறுவனம், ஆடை கட்டுப்பாடு என்ற பெயரில், பெண்களை கொச்சைப்படுத்துகிறது' என, அமெரிக்க பெண்கள், சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, யுனைடெட் விமான நிறுவனம், 'இரு பெண்களும், சிறப்பு சலுகை பயண சீட்டு பெற்று இருந்தனர். அதனால், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மற்ற பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை' என, விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை