அமெரிக்கா அதிரடி தாக்குதல் : அல் - குவைதா தலைவன் பலி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான், அல் - குவைதா பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 19ம் தேதி, அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின், மூத்த தலைவர்களின் ஒருவனான, காரி யாசின் கொல்லப்பட்டதாக, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், 2008ல், ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில், அமெரிக்காவின் இரண்டு ராணுவ அதிகாரிகள் இறந்தனர். லாகூரில், 2009ல், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஆறு போலீசார், இரண்டு குழந்தைகள் இறந்தனர். இந்த இரண்டு தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டவன், காரி யாசின்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

காரி யாசின் இறந்ததை, அல் - குவைதா அமைப்பும் உறுதி செய்துள்ளது.

மூலக்கதை