எகிப்து மாஜி அதிபர் விடுதலை

தினகரன்  தினகரன்

கெய்ரோ: எகிப்து அதிபராக இருந்தவர் ஹோசினி முபாரக். 2011ல் இவரது ஆட்சியை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது போலீசுடன் நடந்த மோதலில் 850 பேர் கொல்லப்பட்டனர். 18 நாள் புரட்சிக்குப்பின் முபாரக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரும், அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டனர். ஊழல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2012ல் இந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டணை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்ட வழக்கில் மார்ச் 2ல் முபாரக் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் நிராகரித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது. கிட்டத்தட்ட 6 வருட சிறைவாசத்திற்கு பின் முபாரக் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

மூலக்கதை